மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

அம்பயர்னா அடிப்போம்: அப்டேட் குமாரு

அம்பயர்னா அடிப்போம்: அப்டேட் குமாரு

தெருவுக்குள்ள கிரிக்கெட் விளையாடும் போது தன்னோட டீம் ஆளு சீக்கிரம் அவுட் ஆகணும்னு கட்டம் கட்டி வச்சு அதுல ஒரு குச்சி நட்டி வச்சு யாகம் வளர்ப்பாங்க பசங்க. அதே மாதிரி அம்பயரா நிற்குறவங்க சரியாவோ, தப்பாவோ அவுட்டுன்னு ஒண்ணை மட்டும் கொடுத்துட்டா அவங்க ஏழு தலைமுறையை தோண்டி எடுத்து திட்டி தீர்ப்பாங்க. அந்த 90’ஸ் கிட்ஸ்லாம் இப்ப டிவிட்டர் பக்கம் வந்து அதே வேலையைத்தான் பாக்குறாங்க.

நேத்து வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுல ஒரு அம்பயர் தப்பா அவுட் கொடுத்துட்டாருங்குறதுக்காக பச்சை பச்சையா கேட்டுகிட்டு இருக்காங்க. தப்பி தவறி அந்த அம்பயர் மட்டும் இன்னைக்கு ட்விட்டரை திறந்து பார்த்தார்னா வேலை வேண்டாம்னு எழுதிகொடுத்துட்டு போயிடுவாரு. அவங்க மேட்ச்சுக்கே இப்படின்னா இந்தியா விளையாடும் போது மறுபடியும் ஒரு டிரெண்டை ஆரம்பிச்சிவிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. எந்த அம்பயர் மாட்டுறாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம். அப்டேட்டை பாருங்க.

@Kozhiyaar

கை கூப்பி தன் முன்னால் நிற்கும் குழந்தையிடம், என்ன வரம் கேட்டிருப்பார் கடவுள்!?

@manipmp

ஒரு சிலரின் பெருமைகளை பொறுமையாய் கேட்க முடிவதில்லை

உஸ்ஸ்

@amuduarattai

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என பள்ளிக்கல்வித் துறை மீண்டும் எச்சரிக்கை.

நீங்க நடவடிக்கை எடுத்திருந்தால், மீண்டும் எச்சரிக்கை விட வேண்டிய அவசியமே இல்லையே.!

@RahimGazzali

முன்னாடில்லாம் நம்ம வீட்ல கரண்டு போச்சுன்னா பக்கத்து வீட்டில் கரண்டு இருக்கான்னு எட்டிப்பார்த்தாங்க. இப்ப என்னன்னா பக்கத்து வீட்டில் கரண்டு பில் குறிச்சாலும் எட்டிப்பார்க்கறாங்க.

@kumarfaculty

தண்ணீர் பஞ்சம் வாசனை திரவியங்களின் விற்பனையை அதிகப்படுத்தும்...!!!

@ItsJokker

அரசியல்வாதிகள் சினிமாவில் வெற்றிபெற குறைந்தபட்சம் "ஹீரோயிஸமும்"

ஹீரோக்கள் அரசியலில் வெற்றிபெற குறைந்தபட்சம் "நடிப்பும்" அவசியமாகிறது..!!!

@amuduarattai

இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். -ஜெயக்குமார்.

மத்திய அரசு உங்களுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி விடாமல் பார்த்துக்கங்க.!

@ItsJokker

எல்லா ஜோசியர்களும் சரியாக கணித்து விடுகிறார்கள்,

"நடந்து முடிந்ததை மட்டும்"

@Annaiinpillai

வாட்ஸ் அப் ஸ்டேடஸின் மூலம் பக்கத்து வீட்டில் நடக்கும் அப்டேட்டுகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

@murugan_itz

நமக்கு இருக்குற பிரச்சனைய சூழ்நிலைகிட்ட புரிய வைக்க முயற்ச்சி பண்ணுனா இதெல்லாம் ஒரு பிரச்சனையானு மதிக்காம போகுது.. என்னத்த சொல்ல..

@Annaiinpillai

அவங்க வீட்டுகாரர் அவள எப்படி பார்த்துகிறார் தெரியுமா என்பது நம் கணவர் நம்மை அப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்கான சிபாரிசு நோட்டிஸ் ஆகும்!

@amuduarattai

நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை.- அமைச்சர் விஜயபாஸ்கர்.

இருந்தாலும், அதற்கு மர்ம காய்ச்சல் என்று தானே பெயர்.!

@Annaiinpillai

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க முழு முயற்சி எடுப்பேன் - ஓ.பி.ரவீந்திரநாத் #

புதுசா ஜிம்முக்கு போறவங்க மாதிரியே பேசுரா மாதிரி இருக்கு?!

@nandhu_twitts

கூட யாராச்சும் வந்திருக்காங்களா என்ற டாக்டரின் கேள்விக்கு..

அந்த முதியவரின் மெளனம் நோயினும் கொடியது..!!

@nandhu_twitts

"உங்கள் இன்கம்மிங் கால் வசதி இன்றோடு நிறுத்தப்படுகிறது" என்ற குறுஞ்செய்தி வந்ததை பார்த்ததும் "இல்லனா மட்டும் நமக்கு எவன் கூப்பிட போறான்" என்ற மனநிலையே தோன்றுகிறது..!!

@BakkarSiddiq

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரை தள்ளி விட்ட ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் - செய்தி #

குமார் கிட்ட பேசுறியா..

குமார்ன்னா கொக்கி குமாரா..

நடிகர் சிவக்குமார்..

@amuduarattai

17,500 கோடியில் 24 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.

அடுத்த தேர்தலுக்கு பாஜக மீது ஊழல் குற்றம் சுமத்த காங்கிரஸ் கட்சிக்கு மேட்டர் கிடைச்சிருச்சு.!

@Anandh_Offl

500 பேருக்கு வேலை போட்டு குடுக்க 25 லெட்சம் பேர்கிட்ட பணம் வாங்கிட்டு பரிட்சை வைக்குறான் பாரு சார் அதான் அரசாங்கம்.

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon