மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

தேர்தல்: குறைந்தது விளம்பரச் செலவுகள்!

தேர்தல்: குறைந்தது விளம்பரச் செலவுகள்!

2019 மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்களுக்காக 1 சதவிகிதத்தை விடக் குறைவான அளவிலேயே செலவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் முடிவடைந்து பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் வரலாற்றிலேயே இந்த ஆண்டில்தான், அரசியல் கட்சிகளாலும் வேட்பாளர்களாலும் தேர்தல் ஆணையத்தாலும் மிக அதிகமான அளவில் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தேர்தலுக்காக மொத்தம் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. எனினும், சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் விளம்பரச் செலவுகள் மொத்தச் செலவில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இருந்துள்ளது.

மே 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு முன்பு வரை, ஃபேஸ்புக் தளத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கான விளம்பரச் செலவு ரூ.27 கோடி மட்டுமே. அதேபோல, கூகுள் தளத்தில் மொத்தம் ரூ.27 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. பிப்ரவரி முதல் ஜூன் வரையில் அரசியல் கட்சிகள் மொத்தம் 14,885 விளம்பரங்களுக்காக ஃபேஸ்புக்கில் ரூ.29.3 கோடி செலவிட்டுள்ளன. அதேபோல, கூகுள் தளத்தில் 1.2 லட்சம் விளம்பரங்களுக்காக ரூ.28.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கூகுள் தளத்தில் பாரதிய ஜனதா கட்சி அதிகபட்சமாக ரூ.18.3 கோடியை விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது. திமுக ரூ.4 கோடியும், காங்கிரஸ் ரூ.3.04 கோடியும் செலவிட்டுள்ளன. ஃபேஸ்புக் தளத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ.4.3 கோடி செலவிட்டுள்ளது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon