மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

தர்பாரில் இணைந்த காஞ்சனா நடிகர்!

தர்பாரில் இணைந்த காஞ்சனா நடிகர்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தில் ஸ்ரீமன் இணைந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதன் முறையாக ரஜினிகாந்துடன் இணையும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்து அதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற மாதம் முடிவடைந்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் புதிய தகவலொன்று கிடைத்துள்ளது.

காஞ்சனா படத்தின் அனைத்து பாகங்களில் லாரன்ஸின் அண்ணனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீமன். தர்பார் படப்பிடிப்பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்போது அவரும் இணைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார்.

19 வருடங்களுக்கு முன் இயக்குநர் முருகதாஸின் முதல் படமான அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில், ஸ்ரீமன் அஜித்துக்கு நண்பராக ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். அதன் பின், முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார். இந்த வாய்ப்பிற்காக முருகதாஸுக்கு தன் நன்றியையும் தெரிவித்துள்ளார் ஸ்ரீமன்.

பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்துவருகின்றனர்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon