மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

மதுரை: ரயில் பயணிகளுக்கு மரக் கன்றுகள்!

மதுரை: ரயில் பயணிகளுக்கு மரக் கன்றுகள்!

சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் பயணிகளுக்கு ஒரே நாளில் 2,000 மரக் கன்றுகளை வழங்கியுள்ளனர்.

ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நேற்று (ஜூன் 6) மதுரை ரயில் நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. காலையில் திண்டுக்கல்லிருந்து மதுரை வந்தடைந்த ஸ்ரீமதி என்ற பயணிக்கு ரயில்வே கூடுதல் டிவிஷன் மேனேஜர் லலித் குமார் மரக் கன்றை வழங்கி இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நேற்றைய தினத்தில் மட்டும் மொத்தம் 2,000 பயணிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

கொய்யா, மாதுளை, புங்கை உள்ளிட்ட மரக் கன்றுகள் வழங்கி மதுரை ரயில்வே அதிகாரிகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். கழிவு மேலாண்மை, அசுத்தங்களை எரிப்பதால் ஏற்படும் புகை மாசு ஆகியவை குறித்த விழிப்புணர்வும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை ரயில்வே காலனியில் உள்ள மக்களுக்கு தெற்கு ரயில்வே பெண்கள் நல அமைப்பு சார்பாக மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. ரயில்வே லெவல் கிராசிங் தொடர்பாகவும், வேன் மூலமாக நேற்றைய தினத்தில் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon