மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஆயிரம் ஜென்மங்களில் மூன்று நாயகிகள்!

ஆயிரம் ஜென்மங்களில் மூன்று நாயகிகள்!

மின்னம்பலம்

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டில் இதுவரை சர்வம் தாள மயம், வாட்ச் மேன், குப்பத்து ராஜா என மூன்று படங்கள் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ளன. இதில் சர்வம் தாள மயம் திரைப்படம் மட்டும் விமர்ச்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஐங்கரன் திரைப்படம் இந்த மாத ரீலிஸுக்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் தணிக்கை குழு இந்த படத்திற்கு யு சான்றிதள் வழங்கி படக்குழுவை பாராட்டியது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். யு.கே செந்தில் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

வழக்கமான எழில் படம் போல் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாக இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டில் ‘ஆயிரம் ஜென்மங்கள் கிளைமாக்ஸ் சூட்டிங் ஆன் ப்ராசஸ்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்த படத்தின் பெயர் ஆயிரம் ஜென்மங்கள் எனத் தெரியவருகிறது.

ஆயிரம் ஜென்மங்கள் என்பது 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஹாரர் படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon