மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜுன் 2019

மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!

மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!

அதிமுகவை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட துக்ளக் இதழுக்கு நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 30ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது. அப்போது கூட்டணி சார்பில் கட்சிக்கு ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பாஜக கூட்டணியின் முக்கிய கட்சியான அதிமுக சார்பில் அமைச்சர் பதவியைப் பிடிக்க தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் என இருவருக்குமிடையே போட்டி நிலவியது. ஆனால் அதிமுக சார்பில் யாரும் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை.

மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி துக்ளக் இதழில் வெளிவந்திருக்கும் கேலிச்சித்திரம் சர்ச்சையை உண்டாக்கியது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருக்கிறது துக்ளக்.

அதாவது மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் நேரடியாக சொல்லியிருக்கிறது துக்ளக். இதுதொடர்பாக டிஜிட்டல் திண்ணை பகுதியில், அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இதற்கு காட்டமாக பதிலளித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. இன்றைய (ஜூன் 7) நமது அம்மாவில் தரங்கெட்ட பத்திரிகையும் தரம்தாழ்ந்த விமர்சனமும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பாஜக அமைச்சர்கள் உள்ளே அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், கழகம் வெளியே நின்று சாப்பிட ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது துக்ளக். பொதுவாழ்க்கை என்பது சேவையாற்றுவது. ஆனால் இதற்கு பதிலாக சாப்பிடுவதே அரசியல் என்பதுபோல துக்ளக் வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களைத்தான் மலிவாகச் சித்தரித்து அவர்களின் நேர்மையை களங்கப்படுத்தி இருக்கிறது” என்று விமர்சித்துள்ளது.

தொடர்ந்து, “அதிகாரத்திற்கு ஏங்குவதாக அதிமுவை அப்பத்திரிகை விமர்சித்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகாலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் உள்ள கட்சி அதிமுக. மத்திய அரசின் அதிகாரங்களுக்கு அதிமுக ஒருபோதும் மல்லுக்கு நின்றதில்லை, மண்டியிட்டும் கிடந்ததில்லை என்பதே வரலாறு” என்று குறிப்பிட்டுள்ள அச்செய்தியில்,

“ஆனால் இதையெல்லாம் அறியாதவர்கள் போல கழகத்தின் அமைச்சர்களை இம்போடேன்ட் என்றும் பந்திக்காக அலைபவர்கள் என்றும் ஒரு குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் துக்ளக் பத்திரிகை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தரம்தாழ்ந்து விமர்சித்துவருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோ நடத்திய பாரம்பரிய பத்திரிகை இப்போது நாளேல்லாம் பெட்டிகடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்றப் பத்திரிகையாக மாறிவிட்டது. அதனால் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் கடந்து போவதே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும் என்றும் காட்டமாக பதிலளித்துள்ளது


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 7 ஜுன் 2019