மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள்!

ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள்!

மின்னம்பலம்

ஆந்திர மாநிலத்தில் சமுதாயத்திற்கு ஒருவர் வீதம் 5 துணை முதல்வர்களை நியமிக்க இருக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சியை தோற்கடித்த 151 இடங்களைப் பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த மே 30ஆம் தேதி ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு சமுதாயத்திற்கு ஒருவர் என்ற வீதம் 5 துணை முதல்வர்களை நியமிக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்திருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தலா ஒருவருக்கு வாய்ப்பு வழங்க இருக்கிறார். அதுபோலவே சிறுபான்மையினரைச் சேர்ந்த ஒருவருக்கும், காப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் துணை முதல்வராக்க இருக்கிறார்.

ஆந்திராவில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், ஐந்து துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். ஆந்திராவில் உள்ள 25 மாவட்டத்திலும் தலா ஒருவர் வீதம் என அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக விஜயவாடா அருகே தடேப்பள்ளியிலுள்ள தனது இல்லத்தில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (ஜூன் 7) ஆலோசனை நடத்திவருகிறார்.

முன்பு சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இரண்டு துணை முதல்வர்கள் இருந்தனர். அவர்களில் சின்ன ராஜப்பா காப்பு இனத்தைச் சேர்ந்தவர். கே.இ.கிருஷ்ணமூர்த்தி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதிமுக ஒன்றிணைந்தபோது துணை முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். இந்த நிலையில் ஒரு மாநிலத்துக்கு ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon