மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜுன் 2019

மோடியை முந்திய ராகுல்

மோடியை முந்திய  ராகுல்

பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று (ஜூன் 7) கேரளா செல்லவுள்ளனர். பிரதமருக்கு முன்பாக ராகுல் காந்தி இன்று நண்பகலில் கேரளா விரையவுள்ளார். அங்கு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. முக்கியமாகப் பல தேர்தல்களில் காங்கிரஸிற்கு வெற்றி வாகை சூடிய உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி இந்த தேர்தலில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் கேரளாவில் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றது காங்கிரஸ். முக்கியமாக முதன்முறையாக வயநாட்டில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி வாகை சூடினார்.

இந்த நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி இன்று மதியம் கேரளா செல்லவுள்ளார். தேர்தலுக்குப் பிறகு அவர் தனது தொகுதிக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் வயநாட்டுக்குச் செல்கிறேன். ஞாயிற்றுக்கிழமை நான் வாக்காளர்களைச் சந்தித்தும், காங்கிரஸ் தொண்டர்களைச் சந்தித்தும் நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த 3 நாட்களில் 15 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்த 3 நாட்கள் பயணத்தில் காளிகாவு, நிலமூரம், எடவன்னா, ஆகிய பகுதிகளில் சாலைமார்க்கமாகச் சென்று ராகுல் காந்தி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 3 நாள் பயணத்தைத் தொடர்ந்து வரும் ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

இதுபோன்று பிரதமர் மோடியும் இன்று இரவு 11.30 மணியளவில் கேரளா வரவுள்ளார். போர்ட் சிட்டியில் உள்ள அரசு விடுதியில் தங்கும் அவர், நாளை காலை குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் வழிபடவுள்ளார். இதைத்தொடர்ந்து குருவாயூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு நண்பகலுக்கு மேல் டெல்லி செல்கிறார்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு பிரதான கட்சித் தலைவர்களும் ஒரே நாளில் கேரளாவுக்குச் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வெள்ளி 7 ஜுன் 2019