மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சத் தடை!

சட்ட விரோதமாக  நிலத்தடி நீரை உறிஞ்சத் தடை!

சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தனியார் குடிநீர் நிர்வாகம் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் நிலத்தடி நீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேவராஜ் என்ற நபர் எந்த அனுமதியும் இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாகவும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், பூவிருந்தவல்லி தாசில்தாருக்கும் உத்தரவிடக்கோரி ஷீலா தேவி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், சுப்ரமணியம் பிராசாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தபோது, இரவு பகல் பாராமல் சட்ட விரோதமாக 50க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் எடுத்துவருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய நீதிபதிகள், தண்ணீர் உறிஞ்சப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon