மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

மேல்மருவத்தூரில் ஆய்வு: அதிகாரி அதிரடி மாற்றம்!

மேல்மருவத்தூரில் ஆய்வு: அதிகாரி அதிரடி மாற்றம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவருவதற்காகச் சில அதிகாரிகள் ஆய்வு செய்யச் சென்ற நிலையில், இதில் தொடர்புடைய வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலைப் பங்காரு அடிகளார், அவரது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். அம்மன் வழிபாடு செய்யும் பக்தர்கள் முக்கியத்துவம் தரும் கோயில்களில் ஒன்றாக இது விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும் இக்கோயிலுக்குப் பக்தர்கள் வருகை தருகின்றனர். 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து இக்கோயிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

சமீபத்தில் ஆதிபராசக்தி கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று மதுராந்தகத்தைச் சேர்ந்த ஆய்வர் ஒருவர் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி, திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர்கள் சுரேஷ், மனோகரன் ஆகியோரைக் கொண்ட குழு மேல்மருவத்தூர் கோயிலில் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது. ஆய்வுக்குழு கேட்கும் விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்று வேலூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 3ஆம் தேதி காலை 9.30 மணியளவில் தனபால் அளித்த உத்தரவு நகலைக் காண்பித்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்யச் சென்றனர் அறநிலையத் துறை அதிகாரிகள். ஆனால், மேல்மருவத்தூர் கோயிலில் இருந்த நிர்வாகிகள் இதற்கு அனுமதி தர முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு நடத்தியது தொடர்பாக வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 7) இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அறநிலையத் துறை உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் மேல்மருவத்தூரில் ஆய்வு மேற்கொண்ட காரணத்தினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon