மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

மூன்று முகத்தில் மிரட்டும் ராய் லஷ்மி

மூன்று முகத்தில் மிரட்டும் ராய் லஷ்மி

ராய் லக்ஷ்மி நடிக்கும் அடுத்த படமான சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று வேடத்தில் தோன்றவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் ல‌ஷ்மி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் நீயா 2. இப்படத்தில் இவருடன் ஜெய், வரல‌ஷ்மி சரத்குமார், கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனாலும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது ராய் லக்ஷ்மி கதை நாயகியாக சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கல்லூரி வினோத், ஷாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோ வெங்கடேசன் என்பவர் இயக்குகிறார். அஸ்வமித்ரா இசையமைக்கிறார், ராமி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் எஸ் ஐ புரோடக்சன் சார்பில் சுப்பையா சண்முகம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் ராய் லஷ்மி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும், இது தவிர மூன்றாவதாக நடிக்கும் வேடம் சஸ்பென்ஸாக வெளியிடப்படாமல் இருக்கிறது.

‘இதுவும் ஒரு வகையில் பழிவாங்கும் திரைப்படம் தான். ஆனால் இதன் திரைக்கதை இதுவரையில் சொல்லப்படாததாக இருக்கும். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இத்திரைப்படம் பல முக்கிய டுவிஸ்ட்களை கொண்டுள்ளதாகவும், பார்வையாளர்களை சீட்டின் நுனியில் கட்டி வைக்கும்’ என இப்படத்தின் இயக்குநர் வினோ வெங்கடேசன் கூறியுள்ளார்.

சென்ற மாதம் வெளியான இதன் மோஷன் போஸ்டர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon