மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

எட்டு வழிச் சாலையைத் திணிக்க மாட்டோம்: முதல்வர்!

எட்டு வழிச் சாலையைத் திணிக்க மாட்டோம்: முதல்வர்!

மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து 8 வழிச் சாலைத் திட்டத்தை அவர்கள்மீது திணிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த ராமகிருஷ்ணா சிக்னலில் இருந்து, ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையில் ஈரடுக்கு மேம்பாலம் சுமார் 320 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒருபகுதியில் பணிகள் முடிவடைந்ததையடுத்து, சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்த பாலப்பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 7) திறந்துவைத்தார். இவ்விழாவில் திமுகவைச் சேர்ந்த சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாலத்தை திறந்துவைத்த பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. அது மாநில அரசின் திட்டமல்ல, மத்திய அரசு கொண்டுவந்தது. ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்துவருகிறது. எட்டுவழிச் சாலை தொடர்பாக நில உரிமையாளர்களிடம் சமாதானம் பேசி, அவர்களின் சம்மதத்துடன் திட்டம் நிறைவேற்றப்படும். எடப்பாடி பழனிசாமி என்ற தனிநபருக்காக மட்டும் அமைக்கப்படும் சாலை அல்ல அது” என்றார்.

“சேலத்தை வளர்ந்த பகுதியாக மாற்ற வேண்டும். புதிய தொழிற்சாலைகள் வரும்போதுதான் மக்களின் பொருளாதாரம் வளரும். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனடிப்படையில்தான் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது” என்று குறிப்பிட்ட முதல்வர், “தமிழக அரசை பொறுத்தவரை நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைப் பறித்து திட்டத்தை திணித்து நிறைவேற்றும் நோக்கம் இல்லை. விபத்துக்களைத் தவிர்க்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பயண நேரத்தை மிச்சப்படுத்தும் விதத்தில்தான் இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன” என்றும் விளக்கம் அளித்தார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon