மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

கணினிமயமாகும் அரசுப் பள்ளிகள்!

கணினிமயமாகும் அரசுப் பள்ளிகள்!

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 20 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை செங்கோட்டையன் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளைக் கணினி மயமாக்கும் திட்டத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.28 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவியைக் கொண்டு, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் உள்ள 20 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளைத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (ஜூன் 6) தொடங்கிவைத்தார். தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்பறைகள் முழுவதையும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஈரோடு மாவட்டம் காராப்பாடியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ”இந்தியாவிலேயே முதன்முறையாகக் கல்வி தொலைக்காட்சியைத் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தொடங்கவுள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் மடிக்கணிகளும், ஸ்மார்ட் கார்டுகளும் வழங்கப்படவுள்ளன. ஜூலை மாத இறுதிக்குள் 7,000 பள்ளிக் கூடங்களில் உள்ள வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும்” என்றார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon