மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

துபாய் விபத்து: 8 இந்தியர்கள் பலி!

துபாய் விபத்து: 8 இந்தியர்கள் பலி!

துபாயில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

துபாயில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று மாலை 5.40 மணியளவில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பு மற்றும் விளம்பரப் பலகை மீது பேருந்து பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியானது தெரியவந்துள்ளது. 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியான இந்தியர்கள் ராஜகோபாலன், பெரோஷ் கான் பதான், ரேஷ்மா பெரோஷ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன், அரக்கவீடில், கிரண் ஜானி, வாசுதேவ், திலகராம் ஜவஹர் தாக்கூர் ஆகியோர் என தெரியவந்தது. இந்தியர்கள் +971-504565441 அல்லது +971-565463903 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபத்து மற்றும் தங்களது உறவினர்கள் தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், ஐரிஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் ராஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், அவர்களது குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் துபாய்க்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில் பேருந்தில் பயணித்தவர்கள் ரம்ஜான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon