மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

நாளை தென்மேற்குப் பருவமழை தொடங்கும்?

நாளை தென்மேற்குப் பருவமழை தொடங்கும்?

தென்மேற்குப் பருவமழை நாளை கேரளாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு பருவமழையின் தொடக்கம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இதன் காரணமாக, தென்னிந்திய மாநிலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகம் வடகிழக்குப் பருவமழையினால் அதிகளவில் மழை பெற்று வருகிறது. இருந்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தமிழக எல்லையோரங்களில் தென்மேற்குப் பருவமழை அதிக மழைப்பொழிவைத் தந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது அரபிக்கடலில் குறைந்த அழுத்தப்பகுதி வரும் 9ஆம் தேதியன்று உருவாகவிருப்பதாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதன் தொடர்ச்சியாக, நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon