மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

நிலவைக் காட்டும் கை!

நிலவைக் காட்டும் கை!

ஒரு கப் காபி!

ஜென் துறவி ஒருவர் தன் சீடனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, அவருக்கு ஒரு சந்தேகம். உடனே ஒரு புத்தகத்தைக் காண்பித்து, இதில் உள்ளதைப் படித்துச் சொல் என்றார்.

அவர் சொன்னபடி படித்துச் சொன்ன பிறகு மாணவன் கேட்டான்: “குருவே உங்களுக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் எப்படி நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறீர்கள்?”

குரு அவனை வெளியில் அழைத்துச்சென்று, “அங்கே பார், அதுதான் நிலா!” என்று சொன்னார்.

மாணவன் அவரைக் குழப்பத்துடன் பார்த்தான். குரு புன்னகையுடன் விளக்கினார்.

“புத்தகம் என்பது என் கை போன்றது. கையால் நிலவைச் சுட்டிக்காட்டியதால் என் கை நிலவாக ஆகிவிடாது. என் கை இல்லாமலும் நிலவைப் பார்க்க உன்னால் முடியும். அப்படி பார்க்க முடியாத நேரத்தில் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. கையின் பந்தம் நிலவைச் சுட்டிக்காட்டியதும் முடிந்து விட்டது. அதற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் என் கை துணையின்றி நிலவைப் பார்க்கலாம். புத்தகமும் அப்படித்தான்” என்றார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon