மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

இந்தியில் தயாராகிறது சந்திரமுகி 2!

இந்தியில் தயாராகிறது சந்திரமுகி 2!

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் பாலிவுட் ரீமேக்கான பூல் புலையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

1993ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மணிச்சித்ரதாழ் திரைப்படம், தமிழில் 2005ஆம் ஆண்டு சந்திரமுகி எனவும், இந்தியில் 2007ஆம் ஆண்டு பூல் புலையா எனவும் ரீமேக்காகி வசூல் சாதனை படைத்தது.

தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், அமிஷா பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பூல் புலையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பர்ஹத் சாப்ஜி என்பவர் இதற்கான கதையை தயார் செய்ததோடு, முதல் பாகத்தின் தயாரிப்பாளர் பூஷண் குமாரை சந்தித்து தான் தயார் செய்த கதையை கூறியுள்ளார். பூஷன் குமாருக்கும் அந்தக் கதை பிடித்து விடவே பூல் புலையா 2 ஆம் பாகம் எடுக்க முன்வந்துள்ளார்.

முதல் பாகத்தை இயக்கிய பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார். ஆனால் முதல் பாகத்தில் நடித்த அக்‌ஷய் குமார், அமிஷா படேல், வித்யா பாலன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை.

அக்‌ஷய் குமார் தற்போது காஞ்சனா படத்தின் ரீமேக்கான லஷ்மி பாம் படத்தில் லாரன்ஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் மார்கெட் குறையாத ஹாரர் ஜானரை அவ்வளவு எளிதில் அக்‌ஷய் குமார் மறுக்கமாட்டார் எனவும், 84 கோடிக்கும் மேல் வசூலித்த அவரது வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரே நடிப்பார் எனவும் திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் படம் குறித்த முக்கிய தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon