மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

புகை மாசு: ஓலா, உபேருக்கு அரசு உத்தரவு!

புகை மாசு: ஓலா, உபேருக்கு அரசு உத்தரவு!

ஓலா மற்றும் உபேர் டாக்ஸி நிறுவனங்கள் தங்களது 40 சதவிகிதம் அளவிலான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் வாகனப் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் தங்களது வாகனங்களில் 40 சதவிகிதம் அளவை 2026ஆம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இந்நிறுவனங்கள் 2021ஆம் ஆண்டுக்குள் 2.5 சதவிகித வாகனங்களையும், 2022ஆம் ஆண்டுக்குள் 5 சதவிகித வாகனங்களையும், 2023ஆம் ஆண்டுக்குள் 10 சதவிகித வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு இதுதொடர்பான எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையை மேம்படுத்த பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. புகை மாசுவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வரும் டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டைக் கட்டாயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் அண்டை நாடான சீனா, எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அங்கு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனைக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு வருவதோடு, டாக்ஸி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 2018-19 நிதியாண்டில் மொத்தம் 3,600 எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வாகன விற்பனையில் வெறும் 0.1 சதவிகிதம் மட்டுமே. அதேநேரம் சீனாவில் 2018ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் கார் விற்பனை 62 வளர்ச்சி கண்டு, மொத்தம் 13 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில், பேருந்துகளை எலெக்ட்ரிக் மயமாக்குவதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டுக்குள் 30 சதவிகிதம் அளவிலான பேருந்துகளை எலெக்ட்ரிக் மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon