மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிக்குத் தடை!

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிக்குத் தடை!

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பேரணி நடத்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் ஆளும் திருணமூல் காங்கிரல் கட்சி 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின் தொடர்ச்சியாக, அம்மாநிலத்தில் சில வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள நிம்தா பகுதியைச் சேர்ந்த திருணமூல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குந்து சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக பேரணி குறித்துப் பேசியவர், “பாஜக ஏற்கனவே ஹூக்ளி, பங்குரா, புருலியா, மிட்னாபூர் மாவட்டங்களில் வெற்றிப் பேரணி நடத்தி தொந்தரவை ஏற்படுத்தியது. இனிமேல் எந்த வெற்றிப் பேரணியும் நடத்த இடமில்லை” என்று தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகும் நிலையில் வெற்றிப் பேரணிகள் நடத்த இனி அனுமதியில்லை என்றார்.

“வன்முறை, கலவரங்களைத் தூண்டும் விதத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். நிர்மல் குந்து கொலை வழக்கில் நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்த மம்தா, “இது கொலைக்கான விசாரணை மட்டுமல்ல, சதிகாரர்களை இனம் கண்டுகொள்வதற்கான விசாரணை” என்று கூறினார்.

பாஜக கட்சி வெற்றி பெற்ற பிறகு வன்முறைகளுக்கு முடிவே இல்லை என்றும், அமைதி நிறைந்த இடமான மேற்கு வங்காளம் ஒருபோதும் வன்முறைகளைச் சகித்துக் கொள்ளாது என்றும் மம்தா தெரிவித்தார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon