மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

RTGS கட்டண நீக்கம் பயனளிக்குமா?

RTGS கட்டண நீக்கம் பயனளிக்குமா?

RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைக் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பெரிய அளவில் பயன்பெறப்போவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக மேற்கொள்ள அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆர்டிஜிஎஸ் (RTGS - Real Time Gross Settlement) மற்றும் நெஃப்ட் (NEFT - National Electronic Fund Transfer) பரிவர்த்தனைகளில் உள்ள கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி நீக்குவதாக நேற்று (ஜூன் 6) அறிவித்தது. இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் அதிகமாகப் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டது.

RTGS பரிவர்த்தனையில் ரூ.25 முதல் ரூ.50 வரையிலும், NEFT பரிவர்த்தனையில் ரூ.10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வரியுடன் சேர்த்து ரூ.2.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வரியுடன் சேர்த்து ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இனி இக்கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது. ஆனால், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்றில், RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகள் மிகக் குறைவான அளவிலேயே மேற்கொள்ளப்படுவது தெரியவந்துள்ளது.

2018-19 நிதியாண்டில், ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் RTGS பரிவர்த்தனைகள் 7 சதவிகிதமாகவும், NEFT பரிவர்த்தனைகள் 9 சதவிகிதமாகவும் மட்டுமே இருந்துள்ளன. மதிப்பு அடிப்படையில் RTGS பரிவர்த்தனை மதிப்பு மொத்த பரிவர்த்தனைகளில் 77 சதவிகிதமாக இருந்துள்ளது. அதாவது, RTGS முறையில் சராசரியாகப் பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.90 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண நடுத்தர மக்களின் பரிவர்த்தனையாக இருக்காது.

NEFT பரிவர்த்தனையிலும் சராசரி பரிவர்த்தனைத் தொகை ரூ.1 லட்சமாக இருந்துள்ளது. எனவே, RTGS, NEFT கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் பெரிதும் பயன்பெறப்போவதில்லை என்று தெரிகிறது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon