மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

லஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’!

லஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’!

சென்னை வெள்ளத்தை மையப்படுத்திய லஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கிஷோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஹவுஸ் ஓனர். ஸ்ரீ ரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர் மற்றும் ஜூனியர் கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி போன்ற படங்களைத் தொடர்ந்து லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நான்காவது படமிதுவாகும்.

2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த சென்னை வெள்ளத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதையை அமைத்துள்ளார் லஷ்மி ராமகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கிஷோருக்கு சென்னையின் வெள்ள காலத்தில் பெய்யும் மழை அவரது கடந்த கால காதலை நினைவு படுத்துகிறது. வெள்ளம் வீட்டை சூழ விட்டிலிருந்து வெளியேற மறுக்கும் கிஷோரின் பிடிவாதமும், கடந்த கால காதலும் ரசிக்க வைக்கிறது.

மன்கி கிரியேட்டிவ் லேப் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

ஹவுஸ் ஓனர்


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon