மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படாது: அமைச்சர்!

குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படாது: அமைச்சர்!

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடிக்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வாறு தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இதனால் குறுவை சாகுபடி தாமதமானது. இந்த நிலையில் டெல்லியில் கடந்த மே 28ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், வரும் ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கான 9.19 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு டெல்டா பகுதி விவசாயிகள் இடையே எழுந்தது.

இந்நிலையில் திருவாரூரில் நேற்று (ஜூன் 6) செய்தியாளர்களிடம் பேசிய டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவரும் உணவுத் துறை அமைச்சருமான காமராஜ், “குறுவை சாகுபடிக்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதில்லை. பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதாலும்தான் இந்தத் தாமதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த வருடமும் அவ்வாறு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. ஆழ்துளை மோட்டார் வைத்திருப்பவர்கள்தான் இந்த வருடம் குறுவை சாகுபடி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் வரத்துக்கு ஏற்பக் குறுவை சாகுபடி செய்வதா அல்லது சம்பா சாகுபடி செய்வதா என்பதை விவசாயிகள் முடிவு செய்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon