மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

துப்பினா தொடச்சிக்குவேன்: அரசியலைக் கலாய்க்கும் ‘நாசா’ கட்சி!

துப்பினா தொடச்சிக்குவேன்: அரசியலைக் கலாய்க்கும் ‘நாசா’ கட்சி!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் துப்பினா தொடச்சிக்குவேன் என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனலின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலகலப்பான இதன் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று வெளியான துப்பினா தொடச்சிக்குவேன் என்ற பாடலின் புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாஞ்சில் சம்பத் ஹார்மோனிய பெட்டி முன் அமர்ந்து ‘இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே’ என்ற பிரபலமான தெலுங்குப் பாடலை பாட, ரியோ மற்றும் ஆர்ஜே விக்னேஷ் அவரைத் தடுக்கின்றனர். ‘மக்கள்னா என்ன, மிஞ்சி மிஞ்சிப் போனா காறித் துப்புவாங்களா? துப்பினா தொடச்சிக்குவேன்’ எனக் கூற பாடல் தொடங்குகிறது.

’துப்பினா தொடச்சிக்குவேன்’ என்ற இந்த வார்த்தைகள் தொலைக்காட்சிப் பேட்டியில் நாஞ்சில் சம்பத்தே உதிர்த்த வார்த்தைகள்தான். சசிகலா சிறைக்குச் சென்றதும் அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டார். அப்போது தீவிர தினகரன் ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், சன் நியூஸ் தொலைக்காட்சியில் ராஜாதிருவேங்கடத்துக்குப் பேட்டியளித்தபோது, ‘இப்படி மாறி மாறி ஆதரிச்சா மக்கள் உங்களை....’ என்று கேட்க வரும்போது, ‘என்ன என் மேல காரித் துப்புவாங்களா? துப்பினா தொடச்சிக்குவேன்’ என்று வாலண்டியராக வார்த்தையைப் போட்டு பதில் கொடுத்தார் நாஞ்சில் சம்பத். அந்த டிவி பேட்டியில் அவர் சொன்ன வார்த்தைகளை அவருக்கே சினிமாவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் காமெடிகள், பிரச்சார நேரங்களில் வைரலான சம்பவங்கள், அமைச்சர்களின் சீரியஸ் காமெடி, குறிப்பாக நாஞ்சில் சம்பத் தன்னுடைய இன்னோவா காரை துடைப்பது என வஞ்சமில்லாமல் கலாய்த்திருக்கிறார்கள்.

குமணன் குமாரன் வரிகளில், ‘அசால்ட்டா ட்வீட்டப் போட்டு அட்மின் பேர சொல்லிடுவோம்’, ‘சாதி மதத்த கிழிச்சு துவச்சு எடுப்போம், எலெக்‌ஷன் வோட்ட சாதி வெச்சு பிரிப்போம்’ என அரசியல்வாதிகளின் இரட்டை வேஷத்தை வெளுத்து வாங்குகிறது.

ஷபிர் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் அந்தோணிதாசன். இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

துப்பினா தொடச்சிக்குவேன் பாடல்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon