மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

விஜய் 63: ஹிட்டடிக்குமா இசைக் கூட்டணி?

விஜய் 63: ஹிட்டடிக்குமா இசைக் கூட்டணி?

விஜய் நடிக்கும் புதிய படத்தின் இசை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் என்ற இரு வெற்றிப்படங்களுக்குப் பின் விஜய், அட்லீ கூட்டணி இணைந்துள்ள ‘விஜய் 63’ திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக மெர்சல் படத்தில் விஜய் - அட்லீ - ரஹ்மான் கூட்டணி பல ஹிட் பாடல்களை வழங்கியது. குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடலின் வீடியோ, யூடியூப் தளத்தில் 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதன் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றிருந்தது.

தற்போது விஜய் 63 படத்தின் இசை உரிமையையும் சோனி மியூசிக் நிறுவனமே பெற்றுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொதுவாக மற்ற முன்னணி நாயகர்களைவிட, படத்தைப் போல பாடல்களிலும் அதிக ஹிட்களைக் கொடுத்துவருபவர் விஜய். இது அவரது திரைவாழ்வின் ஆரம்பக் காலத்திலிருந்து தொடர்கிறது. இதில் அவரது நடனத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது.

அந்த வகையில் மெர்சல் கூட்டணி படத்தில் எந்தவிதமான ஆச்சரியத்தை ஏற்படுத்தவுள்ளனர் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டின் பயிற்சியாளராக நடிக்கிறார். இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடிக்க யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டு வருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon