மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

கொரில்லா: சாட்டிலைட் உரிமை யாருக்கு?

கொரில்லா: சாட்டிலைட் உரிமை யாருக்கு?

கொரில்லா திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அதன் சாட்டிலைட் உரிமை வியாபாரமாகியுள்ளது.

ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான கீ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். நீண்ட நாட்களாக ஒரு வெற்றிப் படத்தை எதிர்பார்த்திருக்கும் ஜீவாவுக்கு கீ திரைப்படமும் அப்படி அமையவில்லை.

ஆனாலும் அவர் கைவசம் உள்ள நான்கு படங்களையும் அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள கொரில்லா, ராஜு முருகன் இயக்கியுள்ள ஜிப்ஸி, ரத்ன சிவா இயக்கத்தில் புதிய படம், ராஜசேகர் இயக்கத்தில் அருள்நிதியுடன் ஒரு படம் ஆகிய நான்கு படங்களின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாலிவுட் திரைப்படமான 83 திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஷாலினி பாண்டேவுக்கு ஜோடியாக ஜீவா நடித்துள்ள கொரில்லா படத்தை ஜூன் 21ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. தற்போது இதன் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் படப்பிடிப்பு புதுச்சேரி, தாய்லாந்து, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவந்தது. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon