மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

ஆட்சியை மாற்ற திமுகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்

ஆட்சியை மாற்ற திமுகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்

அதிமுக அரசை மாற்றுவதற்கு திமுகவுக்கு 100 சதவிகிதத்துக்கு மேல் ஆதரவளிப்போம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும் தமிழகத்தில் 22 தொகுதிகளிலும் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைக்கும் என்று பேசிவந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திமுக 13 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. ஒன்பது எம்.எல்.ஏ.க்களைப் பெற்ற அதிமுக விளிம்பு நிலையில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இதற்கிடையே ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளை திமுக ரகசியமாகச் செய்துவருவதாகவும், இதுதொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்களை திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடர்புகொண்டதாகவும் மின்னம்பலத்தில் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வருகிறோம்.

இந்த நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன் 6) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், ஆட்சி மாற்றத்திற்கான வேலைகளில் திமுக தலைவர் ஸ்டாலின் வேகமாக ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு நீங்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்தவர், “100 சதவிகிதம் நாங்கள் ஒத்துழைப்போம். 100 சதவிகிதத்துக்கு மேலாக ஒரு சதவிகிதம் இருந்தால் அதற்கும் ஒத்துழைப்போம். அதிமுகவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது, அதிமுக ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லையென்றால் மோடி வந்து அதிமுகவுக்கு ஆதரவாக ஒட்டுப் போடுவாரா? எனவே, ஆட்சி கவிழ்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தற்போது நூலிழையில்தான் அதிமுகவின் ஆட்சி அதிகாரம் உள்ளது. அது அறுந்துவிழுவதற்கு அதிக காலம் ஆகாது” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon