மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜுன் 2019

நிதி ஆயோக்: பிரதமர் மோடி ஒப்புதல்!

நிதி ஆயோக்: பிரதமர் மோடி ஒப்புதல்!

நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கை மறு சீரமைப்பு செய்வதற்கு ஜூன் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி, நிதி ஆயோக் தலைவராக மோடி செயல்படுவார். மேலும் துணைத் தலைவராக ராஜிவ் குமார் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் புதிய அரசில் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அமித் ஷா, நிதி ஆயோக் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய மோடி அரசின் ஆட்சியில் நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் ஜூன் 15ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தும் இம்மேலாண்மைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைகளுக்கு நிதி ஆயோக் சார்பாக இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களின் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும் நிதி ஆயோக் விவாதிக்கவுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

வெள்ளி 7 ஜுன் 2019