மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜுன் 2019

தெலங்கானா: ஆளுங்கட்சிக்குத் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

தெலங்கானா: ஆளுங்கட்சிக்குத் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகரைச் சந்தித்த அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர், தங்களை தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைத்துக்கொள்ளுமாறு கடிதம் அனுப்பினர்.

தெலங்கானா மாநிலத்துக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 119 இடங்களில் 88 இடங்களைக் கைப்பற்றி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில் எம்.எல்.ஏ உத்தம் குமார் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றதால், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் தங்களை இணைத்துக்கொள்ள அனுமதி கோரி சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம் நேற்று (ஜூன் 6) மனு அளித்துள்ளனர்.

இவர்களை தெலங்கானா அமைச்சரும், டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமராவை பிரகதி பவனில் சந்தித்துப் பேசினர். நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சருடன் இணைந்து 12 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் பணியாற்றுவோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் கந்தரா வெங்கட்ரமணா ரெட்டி கூறியுள்ளார். கட்சியில் இணைவது பற்றி சபாநாயகரிடம் பேசியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் வெளியேற விரும்பும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு என்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படாது என்று கூறுகிறார்கள். இதை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி உத்தம் குமார், “இது ஜனநாயகத்தின் மீதான படுகொலை” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

வெள்ளி 7 ஜுன் 2019