மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

கிளவ்ஸில் கிளம்பிய சர்ச்சை!

கிளவ்ஸில் கிளம்பிய சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோதிய ஆட்டத்தின்போது மகேந்திரசி்ங் தோனி அணிந்திருந்த கீப்பிங் கிளவ்ஸ் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதலாவது ஆட்டத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடியது. ஜூன் 5ஆம் தேதி சௌதாம்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவ்ஸில் இந்தியாவின் துணை ராணுவச் சிறப்புப் படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும்.

இந்த முத்திரையை அணியத் துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இருப்பினும் கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டதால் அவர் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். 2015ஆம் ஆண்டு துணை ராணுவப் பிரிவில் தோனி பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

ராணுவ முத்திரை பதித்த கிளவ்ஸை தோனி பயன்படுத்த வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி பொது மேலாளர் கிளாரி பேசுகையில், “ராணுவ முத்திரை பதித்த கிளவ்ஸை தோனி பயன்படுத்த வேண்டாம். அதை அகற்றுமாறு பிசிசிஐக்கு நாங்கள் கோரியுள்ளோம்” என்றார்.

“ஐசிசி விதிகளின்படி ஐசிசி உபகரணங்கள் மற்றும் ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத அல்லது தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே, ராணுவ முத்திரை பதித்த கிளவ்ஸை தோனி பயன்படுத்த வேண்டாம். அந்த முத்திரையை அகற்றுமாறு நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon