மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

மெரினாவில் போராட்டம்: போலீசாருக்கு உத்தரவு!

மெரினாவில் போராட்டம்: போலீசாருக்கு உத்தரவு!

மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை போலீசார் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “மெரினா கடற்கரையில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துகின்றன. இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவைக் காவல் துறையினர் தீவிரமாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று (ஜூன் 6) நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைக் காவல் துறையினர் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon