மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

சிறுவர்களை மையப்படுத்திய ‘பிழை’!

சிறுவர்களை மையப்படுத்திய ‘பிழை’!

அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா சிறுவர்களை மையப்படுத்தி இயக்கியிருக்கும் பிழை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காக்கா முட்டை படத்தில் வந்த சின்ன காக்கா முட்டையாக ரசிகர்களை ஈர்த்த ரமேஷ் மீண்டும் ஒரு சிறுவர்கள் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கும் படத்தில் ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நசத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுவர்களின் அப்பாவாக சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர்.

பள்ளிக்குச் செல்வது பிடிக்காமல் ஊர் சுற்றும் மாணவர்களான ரமேஷ், நசத், கோகுல் ஆகியோர் தங்கள் அப்பாக்களின் கண்டிப்பு பிடிக்காமல் ஊரை விட்டு ஓட, அவர்கள் சந்திக்கும் அனுபவங்களாக அமைந்துள்ளது பிழை டீசர். சிறுவர்களின் சுதந்திர மனமும் நடைமுறை யதார்த்தத்திலிருக்கும் பயங்கரங்களையும் பேசும் பிழை மே மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளது.

பிழை டீசர்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon