மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

கிச்சன் கீர்த்தனா: தால் சப்பாத்தி

கிச்சன் கீர்த்தனா: தால் சப்பாத்தி

ஸ்கூல் ரெசிப்பிகள்: மாணவர்களின் ஃபேவரைட்!

ஹோட்டலுக்குச் செல்லும்போது நாம் சாப்பிட நினைக்கும் உணவுக்கு முன்பாக அடுத்த டேபிளில் இருப்பவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது ஆவலைத் தூண்டும். குழந்தைகள் விஷயத்தில் இதுதான் பெரும்பாலும் நடக்கிறது. பள்ளியில் சக மாணவர் முதல்நாள் கொண்டுவந்த உணவை இன்றைக்கு நம் வீட்டில் செய்ய வேண்டும் என்று நச்சரிப்பார்கள் குழந்தைகள். இந்த தால் சப்பாத்தியை உங்கள் குழந்தைகளுக்கு இன்று செய்து கொடுத்தனுப்பினால் நாளை சக மாணவர்களின் வீடுகளில் இந்த நச்சரிப்பு எழும்!

என்ன தேவை?

கோதுமை மாவு - ஒரு கப்

துவரம் பருப்பு - கால் கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு

கரம் மசாலாத் தூள் - அரைக்கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரைக்கால் டீஸ்பூன்

நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து, குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும் (பிறகு திறந்து பார்த்து, தண்ணீர் அதிகமாக இருந்தால், அது குறையும் வரை கொதிக்கவிடவும்). பின்பு, அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து கடைந்து அல்லது தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து அரைத்த பருப்பு, கரம் மசாலாத் தூள், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாகப் பிசையவும். பின்னர் மாவைச் சப்பாத்தி போலத் திரட்டி, நெய் அல்லது வெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

குழந்தைகளுக்கு விருப்பமான வடிவில் குக்கி கட்டர் வைத்து கட் செய்து சுட்டெடுத்து லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்பினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

என்ன பலன்?

அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்தவை பருப்பும் கோதுமையும். பள்ளி நேரங்களில் கூடுதல் சக்தியைத் தருவதுடன் நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளும்.

நேற்றைய ரெசிப்பி: கொத்து தோசை


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது