மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

பாண்ட் படத்தில் நிகழ்ந்த விபத்து: தொடரும் சோகம்!

பாண்ட் படத்தில் நிகழ்ந்த விபத்து: தொடரும் சோகம்!

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாகத் தயாராகும் புதிய படத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் படப்பிடிப்பு தளம் பலத்த சேதமாகியுள்ளது.

பைன் வுட் ஸ்டூடியோவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) அன்று காட்சிக்காகத் திட்டமிடப்பட்டு வெடிக்கும் வெடிபொருட்கள் வெடித்ததால் ஸ்டூடியோவின் உட்புறம் சேதமாகியது. மேலும் தளத்துக்கு வெளியே பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதை ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் படக்குழு அறிவித்துள்ளது.

இச்சம்பவம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் 007-ன் 25ஆவது படத்தின் படப்பிடிப்பில் நிகழும் இரண்டாவது விபத்தாகும். கடந்த மே மாதம் ஜமைக்காவின் நடைபெற்ற படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் டேனியல் கிரேக்கின் காலில் படுகாயம் ஏற்பட்டது. அதனால் அவரது படப்பிடிப்பு சார்ந்த காட்சிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் தள்ளிப்போனது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பைன் வுட் ஸ்டூடியோவில் நடந்த சம்பவம் படக்குழுவினரை மேலும் அதிர்ச்சிக்குள் தள்ளியிருக்கிறது. எம்.ஜி.எம் நிறுவனம் தயாரிக்கும் ‘பாண்ட் 25’ படத்தை கேரி ஜொஜி ஃபுகுனகா இயக்குகிறார்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon