மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

மாணவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்: தமிழிசை

மாணவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்: தமிழிசை

தமிழக பாஜகவின் மையக்குழுக் கூட்டம் இன்று (ஜூன் 6) சென்னை தி.நகரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “ஏற்கனவே நடந்துமுடிந்த தேர்தல் பற்றியும், வருங்காலத்தில் சந்திக்கவுள்ள தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான கேள்விக்கு, “நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இதை ஊக்கப்படுத்தப்படக் கூடாது. இதில் தமிழக அரசியல்வாதிகளை குற்றம்சாட்டுவேன்

வேறு எந்த மாநிலத்திலும் நீட்டை எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்குத் தொடர்ந்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தவுடன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். இதனால் மாணவர்களும் இவர்கள் வந்தால் நீட் ரத்து செய்யப்படுமோ என்று எண்ணுகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “தயவுசெய்து மாணவர்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீர்கள்” என்று கேட்டுக்கொண்ட அவர், இந்தியா முழுவதும் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 5ஆவது இடத்தில் உள்ளதாகவும், கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெற ஆரம்பித்திருக்கிறார்கள் எனவும், அனைத்திற்கும் மேலாக தமிழகத்தில் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon