மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

ஹெல்மெட் விவகாரம் : நீதிமன்றம் கேள்வி!

ஹெல்மெட் விவகாரம் : நீதிமன்றம் கேள்வி!

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றதா? என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூன் 6) நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர், மற்றும் சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்கள்.

அப்போது, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர்கூட ஹெல்மெட் அணிவதில்லை எனவும், டெல்லி பெங்களூரு போன்ற நகரங்களில் அமல்படுத்தும் போது ஏன் தமிழகத்தில் அமல்படுத்த முடியவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு உரிய முறையில் அமல்படுத்துவதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 6 மாதங்களில் ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களிடம் இருந்து 100 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறினார்.

இதற்கு நீதிபதிகள் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறதா, வாகனத்தைப் பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் வாகன சட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன என்று அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.அப்போது காவல் துறையினரும் ஹெல்மெட் அணிவதில்லை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் ஹெல்மெட் அணியாமல் காவல் துறையினர் பயணித்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்தார்.இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தல், ஹெல்மெட் கட்டாயமாக்கிப் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப் படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon