துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் சினேகா இணைந்து நடித்து வரும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் நிறைவுற்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர் நீச்சல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அதன் பின் காக்கி சட்டை என்ற இரண்டாவது படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்தே இயக்கினார். அதனைத் தொடர்ந்து தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி படத்தை இயக்கி பரவலான கவனத்தைப் பெற்றார்.
தற்போது, தனுஷ்-சினேகா இருவரும் இணைந்து புதுப்பேட்டை படத்திற்கு பிறகு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். கொடி படத்தைப் போலவே இதிலும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தனுஷ் அப்பா-மகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒரு கதாபாத்திரத்துக்கு சினேகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குற்றாலத்தில் நடைபெற்று வந்த இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. மேலும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளதால், அன்று படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது. அதனால் தேர்தலுக்கு அடுத்த நாளிலிருந்து தனுஷின் 34 ஆவது படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடரவுள்ளது.
மேலும் படிக்க
ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!
ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!
ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!
தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!