மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜுன் 2019

RTGS, NEFT பரிவர்த்தனைக் கட்டணம் நீக்கம்!

RTGS, NEFT பரிவர்த்தனைக் கட்டணம் நீக்கம்!

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் RTGS, NEFT கட்டணங்கள் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகிலிருந்தே இந்தியாவில் ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக மேற்கொள்ள அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபடியாக, ஆர்டிஜிஎஸ் (RTGS - Real Time Gross Settlement) மற்றும் நெஃப்ட் (NEFT - National Electronic Fund Transfer) பரிவர்த்தனைகளில் உள்ள கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி நீக்குவதாக இன்று (ஜூன் 6) அறிவித்துள்ளது. எனவே, இதற்கான பயனை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

RTGS முறையில் வங்கி வேலை நேரத்தில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல, NEFT முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். RTGS முறையில் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேலான தொகையை அனுப்ப முடியும். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், NEFT பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 முதல் ரூ.5 வரையிலும், RTGS பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 முதல் ரூ.50 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இக்கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

வியாழன் 6 ஜுன் 2019