மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

இந்தியா டீமுக்கு அம்பானி ஓனரா: அப்டேட் குமாரு

இந்தியா டீமுக்கு அம்பானி ஓனரா: அப்டேட் குமாரு

இந்தி மேட்டர்ல சும்மா எதிர்க்குற மாதிரி நடிப்போம்னு ஒரு ட்விட் போட்டதுக்கே எபெக்ட் அதிகமா வரவும் தூக்கிட்டாங்களே.. இவங்களா நீட் பத்தி பேசுவாங்கன்னு மீம் கிரியேட்டர்ஸ்கூட இன்னைக்கு சீரியஸா பேசிக்கிட்டு இருக்காங்க.

24 மணி நேரமும் கடையை திறக்கலாம்னு சொன்ன உடனே விசில் அடிச்ச கூட்டத்துக்கு எல்லாம் அது அந்த கடை இல்லைன்னு சொல்லி புரிய வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு.

ஆமா அந்த பிரியாணியை இன்னுமா வச்சுகிட்டு இருப்பீங்க ஊசிப்போயிருக்காதா..? முதல்ல அந்த போட்டோ எல்லாம் ரிமூவ் பண்ணுங்கப்பா. நேர்ல பிரியாணி கொடுக்காம சாப்பிடுற பிளேட்டை மட்டும் போட்டோ எடுத்து அனுப்பிவச்சவங்களை எல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன். அப்டேட்டை பாருங்க. ஒரு டீ அடிச்சு கோபத்தை குறைச்சுட்டு வாரேன்.

@manipmp

நல்ல எழுத்துக்களை படிப்பதில் உள்ள ஆபத்து என்னவெனில் எழுதுவதற்கான குறைந்த பட்ச தன்னம்பிக்கையும் குறைந்து விடுவதே

@Kozhiyaar

தூங்கும் குழந்தையை எழுப்பி ' Play School' அனுப்புவதே குழந்தைக்கு நடக்கும் முதல் வன்முறை!!!

@Kozhiyaar

மனைவியிடம் மன்னிப்பு கோருவது மிகவும் எளிது!!

இப்ப வீடு துடைக்கவா, பாத்திரம் கழுவவா!?

@mohanramko

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் நீர் திறக்கப்பட மாட்டாது - அமைச்சர் காமராஜ்

24 மணி நேரமும் டாஸ்மாக் திறந்திருக்கும்

@mohanramko

ஆதார் card, பான் card எல்லாம் அவசியம்னு சொல்பவர்களே,

காடு அவசியம்னு சொல்லுங்கைய்யா

@amuduarattai

ஆட்சி வரும், போகும். ஆனால் மக்கள்தான் முக்கியம். -நாராயணசாமி.

ஓட்டுப் போடத் தானே.!?

@Annaiinpillai

T20 யை பார்க்க விரும்பிய மனம் உலக கோப்பைக்கு செவி சாய்க்காதது டிசைன்!

@Annaiinpillai

தற்போதைய அரசியலில் ஆமை கறியும் , சூட்கேஸும் தான் அதிகம் பேசப்படுகிறது!

வெ. பூபதி

பிரியமானவர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாட்களில் கிடைக்கும் பக்குவத்தில், புத்தகங்கள் எழுதுவதற்கான கரு கிடைத்திடும்!

@TamilJokes*

மனைவி: ஏங்க அடிக்கடி மூஞ்சில தண்ணி தெளிக்கிறீங்க

கணவன்: உங்கப்பா தான் ஒன்ன பூ மாதிரி பாத்துக்க சொல்லிருக்காரு.

@Anandh_Offl

பொஞ்சாதிக்கு புது புடவை சாயம் போச்சேங்குற கவலை..

புருசனுக்கு தெண்டமா ஆயிரம் ரூவா போச்சேங்குற கவலை

@iam_Saranallu

ஒரு கொசு நினைத்தால்

யாரை வேண்டுமானாலும்

கொலைகாரனாக்கி விடும்!!

வெ. பூபதி

தேவை என்பது ஆள் சூழ்நிலையைப் பொருத்து மாறும். அதை புரிந்துகொள்ளாமல் 'இதெல்லாம் உனக்குத் தேவையா?' எனக் கேட்பது அபத்தம்!

@manipmp

நல்லா படிச்சிருக்கலாம்னு நினைக்கும் போது

வயது நாற்பதை தொட்டிருக்கும்

டிசைன்

@parveenyunus

பா.ஜ.க. சின்னத்தை அழித்து திரினாமுல் காங்கிரஸ் சின்னத்தை வரைந்தார் மம்தா #

இதத் தான் 'சித்திர'வதைன்னு சொல்றாங்களோ..?

@கருப்பு கருணா

உலகமெங்கும் சுற்றி வந்துவிட்டேன். ஆனால் இந்தி தெரியாததால் என் வீட்டு வாசலில் இருக்கும் கூர்க்காவிடம் பேசமுடியவில்லை : எஸ் வி சேகர்

ஆமா .. நீங்க ஐநா சபை பொதுச்செயலாளர் .... அவரு அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலாளர்... நீங்க ரெண்டு பேசிக்கலன்னா உலகப்போர் வந்துவிடும்... க்கும்

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon