மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷால் பதிலளிக்க உத்தரவு!

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷால் பதிலளிக்க உத்தரவு!

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கான தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக அரசும் விஷாலும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித் துறை நியமித்து உத்தரவிட்டது.

தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்ததுடன், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் நேற்று (ஜூன் 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தின் பதவி காலம் முடிந்துவிட்டதால் சங்கத்தின் தேர்தலை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு வழக்கையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி, தேர்தலை நடத்துவது தொடர்பாக தமிழகப் பத்திரப்பதிவுத் துறை செயலாளர், பத்திரப்பதிவுத் துறை தலைவர், சங்கத்தைத் தற்போது நிர்வகிக்கும் தனி அதிகாரி, சங்கத் தலைவர் விஷால் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon