மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

அமெரிக்காவில் வேலை: விசாவுக்கு கெடுபிடி!

அமெரிக்காவில் வேலை: விசாவுக்கு கெடுபிடி!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கெடுபிடிகளால் ஹெச்.1 பி விசா விநியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிய அங்கு அமெரிக்க அரசால் ஹெச்.1 பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க விசாக்களைப் பெற்று அங்கு சென்று பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இந்த விசாவை வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும் பட்சத்தில் மேலும் 3 ஆண்டுகள் இந்த ஹெச்.1 பி விசாவை நீட்டித்துக் கொள்ளலாம்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே பல்வேறு விதிமுறைகளை அமெரிக்க அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களையே அதிகமாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அழுத்தங்களால் இந்த ஆண்டில் விசாவுக்கான ஒப்புதல் வழங்கும் அளவு கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ஒப்புதல் வழங்கும் அளவு 85 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 73 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

2016-17 நிதியாண்டில் மொத்தம் 3,73,400 விசாக்களுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், 2017-18 நிதியாண்டில் மொத்தம் 3,35,000 விசாக்களுக்கு மட்டுமே ஒப்புதல் கிடைத்துள்ளது. ஹெச்.1 பி விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் 4,03,300லிருந்து 3,96,300 ஆகக் குறைந்துள்ளது. இந்த விவரங்கள் அமெரிக்க குடியுரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon