மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

பணமதிப்பழிப்பு உண்மையை பேசும் ‘மோசடி’!

பணமதிப்பழிப்பு உண்மையை பேசும் ‘மோசடி’!

பணமதிப்பழிப்பின் போது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட மோசடி என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அறிமுக இயக்குநர் K.ஜெகதீசன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். இன்று காலை வெளியான இதன் போஸ்டர் சமூக வலைதளங்களை பரபரப்பாக்கி வருகின்றது. படத்தின் டைட்டிலான மோசடியில் உள்ள ‘மோ’ மற்றும் ‘டி’ பெரியதாகவும், ‘ச’ என்ற எழுத்து மட்டும் சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வையில் மோடி என்றே வாசிக்க முடிகிறது. மேலும் ரூபாய் நோட்டை பிரதானமாகக் கொண்ட ஒரு போஸ்டரில் காந்திக்கு பதிலாக ஹீரோ, ஹீரோயின் முகம் அமைந்த போஸ்டர் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

மோசடி படத்தை பற்றி இயக்குநர் K.ஜெகதீசன் கூறும் போது, ‘இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது’.

மேலும், ‘அதை தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஜெசிஎஸ் மூவீஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஷாஜகான் இசையமைத்திருக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon