மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?

அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் தொரசானி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தொரசானி. இப்படத்தில் கதாநாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். இதன் டீசர் இன்று(ஜூன் 6) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

டீசரின் தொடக்கத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஊருக்குள் வருவது காட்டப்படுகிறது. காரை கண்டதும் ஊர் மக்கள் அனைவரும் மண்டியிட்டு வணங்குகிறார்கள். பின்னணியில் சின்ன தொரசானி அவங்க மாளிகையை விட்டு வெளியவே வரமாட்டாங்டா என ஒரு ஆண் குரல் ஒலிக்கிறது.

அதன் பிறகு சின்ன தொரசானி என சொல்லப்படும் படத்தின் கதாநாயகியும் அவளின் ஆடம்பர வாழ்க்கையும் காட்டப்படுகிறது. பின்னர் படத்தின் நாயகன் தான் சின்ன தொரசானியை காதலிப்பதாகவும் அவளும் தன்னை காதலிப்பதாகவும் தன் நண்பனிடம் கூறுகிறான். பின் இருவரின் காதல் காட்சிகள் காட்டப்படுகிறது. கடைசியில் படத்தின் நாயகனை தலைகீழாக கட்டி வைத்து அடிப்பது போல் டீசர் நிறைவடைகிறது.

பழகிய காதல் கதையாக இருந்தாலும் புது முக நடிகர்களின் தோற்றம் மற்றும் கிராமியப் பின்னணி ரசிக்க வைக்கிறது. 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமிது.

விஜய் தேவரகொண்டாவின் முதல் படமான அர்ஜுன் ரெட்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று குறுகிய காலத்திலேயே விஜய்யை தெலுங்கின் முன்னணி நாயகனாக மாற்றிய நிலையில், அவரது தம்பியான ஆனந்த் தேவரகொண்டாவின் அறிமுக படமான தொரசானிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சுரேஷ் புரொடக்‌ஷன் சார்பில் டி.சுரேஷ் பாபு தயாரித்துள்ள இப்படத்தை கே.வி.ஆர் மகேந்திரா என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொரசானி டீசர்


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon