மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

ஆஸ்திரேலிய ஓபன்: சிந்து வெளியேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன்: சிந்து வெளியேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

1,50,000 டாலர் பரிசுத் தொகைக்கான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத், சமீர் வெர்மா, சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா உள்ளிட்டோர் பங்கெடுத்தனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் 5ஆம் நிலை வீராங்களையான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், இரண்டாவது சுற்றில் இன்று தாய்லாந்து நாட்டின் நிட்சோன் ஜிண்டபோலை சிந்து எதிர்கொண்டார். இப்போட்டியில் 19-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து சிந்து தொடரை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளார்.

எனினும் இந்தியாவுக்கு ஆறுதல் தரும் விதமாக, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் 21-16, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் லீ டாங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில், சத்விக் சாய்ராஜ் மற்றும் கிரேக் ஷெட்டி ஜோடி, மனு அட்ரி மற்றும் சுமீத் ரெட்டி ஜோடியை 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி 14-21, 13-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் பேக் ஹா நா மற்றும் கிம் ஹை ரின் ஜோடியிடம் தோற்று தாயகம் திரும்பியுள்ளது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon