மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

சூரரைப் போற்று: புதிய அப்டேட்!

சூரரைப் போற்று: புதிய அப்டேட்!

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெளியாகி சுமார் 18 மாதங்கள் கழித்து என்ஜிகே திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் காத்திருப்புக்கு நியாயம் செய்யும் வகையில் படம் அமைந்துள்ளதை வசூல் விபரங்கள் காட்டுகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் வெளியாகவுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சாயீஷா கதாநாயகியாக நடித்துள்ள அப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்காரா தற்போது இயக்கிவரும் புதிய படம் சூரரைப் போற்று. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சண்டிகரில் நிறைவடைந்துள்ளது.

அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்பே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கான இசையமைப்பு பணிகளை முடித்துவிட்டார். ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் மற்றும் ஜேம்ஸ் பாண்ட்டின் ஸ்கைஃபால் போன்ற படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் கிரேக்பவல் படக்குழுவில் இணைந்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து குனித் மொங்கா தயாரிக்கிறார். நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஆர்.கோபிநாத்தின் பயோ பிக் திரைப்படமாக உருவாகும் என கூறப்பட்ட நிலையில் சூர்யா அதை மறுத்துள்ளார். அவரது வாழ்க்கையிலிருந்து சில முக்கிய சம்பவங்களை மட்டும் காட்சிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon