மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

வேலை தருமா மோடி குழு?

வேலை தருமா மோடி குழு?

இந்தியாவில் வேலைவாய்ப்பு, முதலீடுகள் ஆகியவற்றை உயர்த்த இரண்டு புதிய அமைச்சரவைக் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.

வேலையின்மை பிரச்சினை இந்தியாவில் நீண்ட காலமாகவே தொடர்ந்துவருகிறது. சென்ற முறை நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றபோது வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்படும் என்று வாக்களித்திருந்தார். ஆனால் போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. எனவே இந்த முறை மோடி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதால் வேலை உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகளை உயர்த்த இரண்டு புதிய அமைச்சரவைக் குழுக்களை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.

முதலீட்டுக்கான அமைச்சரவைக் குழுவின் தலைவராக மோடி இருக்கிறார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். வேலைவாய்ப்புக்கான அமைச்சரவைக் குழுவின் தலைமைப் பொறுப்பிலும் நரேந்திர மோடியே இருக்கிறார். அவர் தவிர்த்து, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், வேளாண் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேஷ் சிங் தோமர், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், திறன் மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சர் மகேந்திர பாண்டே நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நரேந்திர மோடியின் இந்த ஆட்சியில் தனியார் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் சமூகத் திட்டங்களில் அதிகம் செலவிடுதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இரண்டு அமைச்சரவைக் குழுக்களும் மேற்கூறிய பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon