மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

சுயம் பிரகாசமடைவோம்!

சுயம் பிரகாசமடைவோம்!

ஒரு கப் காபி!

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, அகங்காரத்தை கைவிடாத கலைஞர்களை பற்றிய நீண்ட விவாதம் எழுந்தது. சமகாலத்தில் கலைஞர்கள் எல்லாம் கடவுள் போல ஒரு போலி முகமூடியுடன் தோற்றமளித்துக் கொண்டிருக்கையில் அவ்விவாதம் பல கதவுகளை திறந்துவிட்டது.

கலைஞர்களும் அவர்தம் அகங்காரமும் ஞானச் செருக்காக தொடந்து போற்றப்படும் காலமிது. கலை, கலைஞன், படைக்கும் மனிதன் என ஒவ்வொன்றும் பல்வேறு கூறுகளாக பிரிந்து நிற்கும் போது அகங்காரம் கொண்ட படைப்பு மனிதன் தன் கலையையும் தனக்குள்ளிருக்கும் கலைஞனையும் கேள்விக்குட்படுத்துகிறான்.

மைக்கிலாஞ்சலோ உலகப் பிரசித்தி பெற்ற பியாத்தா சிற்பத்தை செதுக்கிய பின், ஒரு ஜமீன்தார் வீட்டுப்பெண் அவரை சந்திக்கிறாள். தன் பங்களாவில் புதிதாக அமைக்கவுள்ள தோட்டத்தில் ஹெர்குலிஸ் சிற்பம் இருந்தால் நன்றாக இருக்கும், தாங்கள் தான் வந்து செய்துதரவேண்டும் என கேட்கிறாள். பியாத்தா போன்ற உச்சத்தை தொட்ட கலைஞன் எவ்வித மறுப்புமின்றி அப்பெண்ணின் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றார். ஏன் மைக்கிலாஞ்சலோ அச்சிற்பத்தை செய்ய ஒத்துக்கொண்டார் என கேள்விகள் வந்து வந்து மறைந்துகொண்டிருந்தன.

இதற்கு இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் தன் ஹெர்சாக் ஆன் ஹெர்சாக் என்ற புத்தகத்தில் அழகான விளக்கமொன்றை அளிக்கிறார். மைக்கிலாஞ்சலோ தன்னை கலைஞன் என அறிவிக்கவோ, தன் தலைக்குள் அகங்காரம் என்ற சாத்தானையோ புகுத்தவில்லை. அதனால் அவனால் பியாத்தாவையும் ஹெர்குலிஸையும் படைக்க முடிந்தது. 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுக்கு பின்பு தான் இந்த பிராண்டிங்கெல்லாம் நடைபெற தொடங்கியதென இதன் வரலாற்றையும் கூறிச் செல்கிறார்.

தேவதேவனின் வரிகளில் கூற வேண்டுமெனில்..

தன் கலையால் தன்னை நிறைத்துக்கொண்டவன் பிறிது எதற்கும் இடமில்லாதவன், சுயம்பிரகாசமானவன்.

அவனுக்குள் துயர் நுழைவதில்லை.

கலையால் ஒருவன் தன்னை ஈடுபடுத்தி நிறைத்துக்கொண்டிருக்கும் போது அகங்காரம் என்ற துயர் எப்படி வரும்? தொழில்நுட்பத்தால் கூட சாத்தியமாகா கலா சிருஷ்டியை சிற்பங்கள் வாயிலாக கைகளாலேயே படைத்த சிற்பிகளின் பெயர் எந்த கல்வெட்டின் கீழ் பொறிக்கப்பட்டது? இயற்கையின் பெருங்கருணையில் எல்லாமும் கலைதான், எல்லோரும் கலைஞர்கள் தான்.

“நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” - தொல்காப்பியம்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon