மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

சந்தானம் அடிக்கும் ‘டகால்டி’!

சந்தானம் அடிக்கும் ‘டகால்டி’!

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் ஏ 1 படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான அதன் பாடல்களும் கவனம் ஈர்த்தன. அறிமுக இயக்குநர் ஜான்சன் இப்படத்தை இயக்குகிறார். மேலும், இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்திலும் சந்தானம் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படமான டகால்டி என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கவுண்டமணியின் டிரேட்மார்க் வசனமாக கருதப்படும் டகால்டி என்ற வார்த்தையை படத்தின் தலைப்பாக பயன்படுத்தியுள்ளனர். சந்தானம் கவுண்டமணியின் தீவிர ரசிகர் என்பதும் அவரது உடல்மொழியையும் பாணியையும் பல படங்களில் அவர் பின்பற்றியுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே. பல மேடை நிகழ்ச்சிகளில் சந்தானமே இதை வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தானத்துடன் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 18 ரிலீஸ் சார்பில் செளத்ரி மற்றும் ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் சார்பில் சந்தானமும் இணைந்து தயாரித்துள்ளனர். மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon