மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

நிபா வைரஸ்: கேரள முதல்வர் ஆலோசனைக் கூட்டம்!

நிபா வைரஸ்: கேரள முதல்வர் ஆலோசனைக் கூட்டம்!

கேரளாவை உலுக்கி வரும் நிபா வைரசைக் கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இன்று (ஜூன் 6) ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். . இந்த கூட்டத்தில் நிபா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பலருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவிய இந்த வைரஸ் காரணமாகப் பலர் இறந்தனர் என தெரிய வந்தது. கேரளாவில் கடந்தாண்டு மட்டும் 17 பேர் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு கல்லூரி மாணவர் உட்பட 6 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்து அவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த 6 பேருக்கு வைரஸ் தாக்கம் இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது. இதுவரை 314 பேர் வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிபா தாக்கப்பட்ட கல்லூரி இளைஞர் தற்போது தேறி வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நேற்று தெரிவித்தார். இந்நிலையில், நிபா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதல்வர் பினராயி விஜயன்.

நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon