மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

தொடங்கியது அமலா பால் பட பிசினஸ்!

தொடங்கியது அமலா பால் பட பிசினஸ்!

பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பதை அமலா பால் கறாராகப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். அவர் நடிப்பில் ஆடை, அதோ அந்த பறவை போல என இரு படங்கள் ஒரே நேரத்தில் தயாராகிவருகின்றன.

அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கும் அந்த பறவைப் போல படத்தில் அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகர் ஆஷிஸ் வித்யார்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளார்கள். செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜேக்ஸ் பேஜோய் இசையமைத்துள்ளார்.

படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில் இதன் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பெற்றுள்ளார். இதனால் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள கூர்கா படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதன் விநியோக உரிமையையும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரே பெற்றுள்ளார்.

ஆடை, அதோ அந்த பறவை போல ஆகிய இரு படங்களைத் தவிர அமலா பால் நடிப்பில் மலையாளத்தில் மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. ஆடை படத்திற்கு சமீபத்தில் சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon