மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

தேர்தல் தோல்வி: காரணம் தேடும் கமலாலயம்!

தேர்தல் தோல்வி: காரணம் தேடும் கமலாலயம்!

பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், இன்று (ஜூன் 6) தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் மையக் குழு கூடி ஆய்வு செய்து வருகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுதும் பெரு வெற்றிபெற்ற பாஜக, தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர வேறெங்கும் சோபிக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றிபெற்றதைத் தவிர, அந்த அணி வேறு எங்கும் வெல்லவில்லை.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளரும்,தமிழக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தலைமையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான பொன்.ராதாகிருஷ்ணன்,. ஹெச்,ராஜா, நயினார் நாகேந்திரன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

’தேர்தலில் பாஜகவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடைய ஒத்துழைப்பு பற்றியும் இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்கள் மக்களவைத்தொகுதிகளில் அதிமுக காட்டிய அக்கறையை விட தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில்தான் அதிக அக்கறை காட்டியதாக ஏற்கனவே தலைமைக்குத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்திலும் இந்த விவாதம் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும், விரைவில் வர இருக்கிற மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது குறித்தும் கூட்டத்தில் பேசப்படலாம் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon